மூலம்
- வேறு எதிலுமிருந்து தோன்றாமல், தானே முதலில் தோன்றியிருப்பதுதான் மூலம்.
- எல்லாவற்றுக்கும் முன்பதாகத் தோன்றியிருப்பது. தன்னிடமிருந்து எல்லாம் தோன்றுவதற்கு இடம்
கொடுக்க வல்லது மூலம்.
- பிறவற்றின் கலப்பு எதுவும் இல்லாதது மூலம்.
தமிழ்தான் மூலம்
எல்லா மொழிகளுக்கும் தமிழ்மொழிதான்:-
- மூலம்
- மூல மொழி
- மூலத் தாய்மொழி
- உலக மொழிகள் அனைத்துமே தமிழிலிருந்து வெவ்வேறு காலத்தில் பிரிந்து வளர்ந்திருப்பவை.
இறைநிலைக்கு ஒப்பானது தமிழ்நிலை
- படைத்தல் – காத்தல் – அழித்தல் எனும் மூன்று பேரருட் செயல்களை நிகழ்த்தியதற்கு முன்னரும் பின்னரும் தன் நிலையினில் மாறாதிருப்பது இறைநிலை. அந்த நிலை தமிழ்மொழிக்கும் ஒத்தமைகிறது.
- அதனால்தான், தமிழ்மொழியை இறைமொழி என்று அருளாளர்கள் போற்றுகின்றனர். அதன் காரணமாகவே “இறை வாழ்க – இறைதந்த தமிழ்வாழ்க” என்று போற்றிக் கொண்டாடப்படுகிறது.
- மற்ற பொருள்களெல்லாம் ஏதோ ஓர் அல்லது ஒருசில பொருள்களிலிருந்து தோன்றியிருக்கும்; இறை ஆகிய பரம்பொருள் அப்படித் தோன்றவில்லை.
- அதுபோல், மற்ற மொழிகளெல்லாம் ஏதோ ஓர் அல்லது ஒருசில மொழியிலிருந்து தோன்றியிருக்கும்; ஆனால், தமிழ் அப்படித் தோன்றவில்லை.
ஆதிபகவன்
- எல்லாப் பொருள்களையும் அவற்றின் அறிவியக்கம் – உணர்வியக்கம் என்பவற்றைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
- ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு, ஆறறிவுஎன்று அவை பிரிக்கப்படும்.
- அவை எல்லாவற்றோடும் இறை கலந்ததாகவும் கடந்ததாகவும் இருக்கிறது – இயங்குகிறது – இயக்குகிறது.
- எனவே, அனைத்துக்கும் மூலமாக இருப்பதால் ஆதி எனவும், அனைத்திலும் கலந்திருப்பதால் பகவன் எனவும், இந்த இரண்டு நிலைகளையும் ஒன்றாக உணர்ந்து போற்றும் வகையில் ஆதிபகவன் எனவும் கூறப்படுகிறது.
- அதுபோல், அனைத்து மொழிகளுக்கும் மூலமாகவும் – அனைத்து மொழிகளிலும் வேர்முதலாக இரண்டறக் கலந்து நிற்பதாகவும் திகழ்கின்ற காரணத்தால்தான் தமிழும் மூலப் பெருந்தமிழ் எனப்படுகிறது.
- அது வளர்ந்து காத்துவைத்திருக்கும் வாழ்க்கை வழிமுறைகள் ஆகிய மரபுகள் அனைத்தையும் உள்ளிட்டு மூலப் பெருந்தமிழ் மரபு எனப் பணிவன்புடன் போற்றப் படுகிறது.
பாரினோடு கூடிநின்ற பண்பு
பரம்பொருள் பண்பு!
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே!
– சிவவாக்கியம் 300
ஐம்பூதப் புணர்க்கை இருக்குமாறது எங்ஙனே?
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள்நான் இருக்குமாற(து) எங்ஙனே!
– சிவவாக்கியம் 8
மணிமேகலைப் பாவியத்தில்
இவை நம் பதிவு!
எல்லையில் பொருள்களில்எங்கும்–எப் பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்பில் அறிவன் இறை!
…………………………………………………………
இருசுட ரோடு இயமானன் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற் போனும் கலைஉரு வினோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தான்ஒன் றிலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்!
கற்க! நிற்க! கற்பிக்க!
- ஆகவே, தமிழர்காள்! மூலப் பெருந்தமிழ் மரபுக்கு நேரடி உரிமையும் உறவும் உடையவர்கள் நாம் என்பதனை அறிந்துகொண்டோம்.
- மூலப் பெருந்தமிழ் மரபினைக் கற்க வேண்டும் – கடைப்பிடித்து நிற்க வேண்டும் மற்ற யாவர்க்கும் கற்பிக்கவும் வேண்டும்.
- பொறுப்புணர்ந்து பணிசெய்ய வாருங்கள்!