அறிமுகம்
கடந்த 3000 ஆண்டுகளாக அகநிலையிலும், புறநிலையிலும் பல்வேறு தாக்குரவுகளின் காரணமாகத் தமிழியல் கொள்கைகளில் பிறழ்ச்சிகளும், பின்னடைவுகளும், திசைத்திருப்பல்களும், உள்வீழ்ச்சிகளும் ஏற்பட்டு வந்திருக்கும் நிலைமை வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன. எனினும், காலந்தோறும் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் தோன்றி காப்பு; மீட்பு; ஆக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் தமிழியல் நல்வாழ்வுக்காகப் பல்லாற்றானும் பாடாற்றி வந்துள்ளனர். அவர்களை அடியொற்றி தற்காலச் சூழலை உணர்ந்தும் எதிர்காலத் தேவையை நினைந்தும் முறையான செயலாய்வுகளின் மூலம், திட்டமிட்ட மேம்பாட்டுப் பணிகளை வடிமைத்துக் கொடுப்பதன் வழியாக,
- தமிழியல் கொள்கைகளை நிலைப்படுத்தவும்
- தமிழ் மக்களைத் தமிழியல் உணர்வோடு முன்னேற்றவும்
- எல்லாத் துறைகளிலும் உலக இனங்களுக்கு ஈடாக மேலேற்றவும்
ஆகிய இலக்குகளைக் கருத்திற்கொண்டு தமிழியல் ஆய்வுக் களம் நிறுவப்பட்டது.
பொது நோக்கம்
- மரபியல் நெறிகளைக் கண்டுகாட்டல்.
- உள்ளார்ந்த உண்மைகளை அறியச்செய்தல்.
- பழைய மரபாட்சிகளை விளக்கப்படுத்துதல்.
- புதிய வளர்ச்சி மேம்பாடுகளின் தடங்காணல்.
- தரவுகளை முறைப்படுத்திப் பதிவுசெய்தல்.
- உலகப்பயன் நோக்கி உறவுப்பாலம் அமைத்தல்.
- தமிழ் மக்கள் தமிழியல் உணர்வோடு முன்னேற வழிகாட்டல்.
நடவடிக்கைகள்
- தமிழ் முறைப்படி வாழ்வியல்
கரணங்களை நடத்துதல்.
- சொற்பொழிவு, பட்டறை, வகுப்பு, பயிற்றி, கலந்துரையாடல், விளக்கவுரை மூலமாக தமிழ்-தமிழர்- சமயம்-மெய்யியல் ஆகிய மூலப்பெருந்தமிழ் மரபுகளை விளக்கப்படுத்துதல்.
- தமிழர் வாழ்வியலுக்குத் தேவையான நூல்கள், ஆய்வறிக்கைகள், செய்திகள், துணைப்பொருள்கள் ஆகியவற்றை வெளியீடு செய்தல்.
|
