Press ESC to close

ஒரே மொழி சமற்கிருதமா? ஒரே இனம் இந்தியரா? ஒரே நாடு இந்தியாவா? ஒரே சமயம் இந்துவா?

• சமற்கிருதம் அழிந்தால்
இவை அத்தனையும் அழிந்துவிடுமா!

• சமற்கிருதம் மட்டுமே இருந்தால்
இவை அத்தனையும் நிலைத்திருக்குமா?

• தமிழ் என்று ஒரு மொழி உண்டு; ஆனால், தமிழன் என்றொரு தனி இனம் இல்லை! அப்படியா – இஃது உண்மையா?

• இது மற்றெல்லா மொழியினத்தவர்க்கும் உடன்பாடானது என்று யராவது கேட்டுச் சொல்ல முடியுமா?

• இந்தியாவுக்குப் போக வேண்டாம் மலேசியாவிலேயே யாராவது கேட்டுச் சொல்ல முடியுமா?

• மலாய் முதுமொழி “ Bahasa Menunjukkan Bangsa” என்று கூறுவது பொய் என்று போய்ச் சொல்லிப் பாருங்கள்!

• “ Memartabatkan Bahasa Melayu” என்பது பிறமொழி வெறுப்பா? மறுப்பா?

• “Ketuanan Melayu” என்பது பிழையா?

• “Bahasa, Bangsa, Nusa, Agama” என்ற மலாயர் செயல்முறை முறையற்றதா?

• மலாயில் ஒன்றுமில்லை; எல்லாம் அரபியில்தான் உள்ளதா? அரபு மொழி அழிந்தால் மலாயர்க்கு என்று எதுவுமே இல்லாமல் ஆகிவிடும் என்பது உண்மையா?

• “ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அதன் மொழியை அழித்திட வேண்டும்.” என்று சொன்ன மேலையர்கள் விளங்காதவர்களா?

• மதத்தால் கிறித்தவர் என்பதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் தேசியங்களை விட்டுவிட்டனவா? எல்லோரும் கிறித்தவர்கள் என்பது மட்டுமே உண்மை என்று முடிவுசெய்துவிட்டனவா?

• ஒரே மரபினம் (Rumpun) என்பதால், தங்கள் மொழியையோ மொழிவழி இன அடையாளத்தையோ எந்த மண்ணின் மைந்தரினமாவது விட்டுவிட்டதா?

• எல்லாம் அரபுமொழியில்தான் உள்ளன என்று தாய்மொழி மேல்வலர்ச்சிப் பணிகளை அவை விட்டுவிட்டனவா?

• உலக ஒன்றியத்தில் அவ்வந் நாடவர் தத்தம் மொழியில் பேசுவது எதைக் காட்ட? எல்லாரும் பெரும்பாலும் ஆங்கிலம் அறிவார்களே!

• தமிழில் ஒன்றுமில்லை; எல்லாம் சமர்கிருதத்தில்தான் உள்ளது என்று ஏன் திசைதிருப்பு வேலையைச் செய்கிறீர்கள்?

• தமிழ்மொழியைத் தமிழ்ப்பள்ளியிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழவேள் கோ. சாரங்கபாணியார் ‘தமிழ் எங்கள் உயிர்’ என்று முழங்கி அதனை கல்விமொழி ஆக்கியது வீணா?

• அப்படியென்றால், எல்லாம் இருக்கின்ற சமற்கிருதத்தைக் கல்விமொழியாக வைத்துவிடலாமே!

• தமிழ்ப்பள்ளிகளைச் சமற்கிருதப் பள்ளிகளாக மாற்றிவிட வேண்டியது தானே?

• இந்தியாவின் ஒரே கல்விமொழியாகச் சமற்கிருதம் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் ஆர்.எசு.எசு கோரிக்கைக்கு இந்தக் கொள்கை விளக்கம் முழுதும் ஒத்துச் செல்கிறது!

• எல்லாரும் எல்லாவற்றிலும் சமற்கிருதம் வழியாகக் கற்று; எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சமத்தரமாக – இந்துவாக மட்டுமே வாழ வேண்டியதுதானே? அரசினரிடத்தில் கோரிக்கை வைத்து உடனடியாகச் செயல்படுத்த எல்லா இந்துக்களும் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். உடனே செய்யுங்கள்! முடியுமா?

• மொழியினம்சமயம் மூன்றாலும் ஒருமித்து இயங்க வேண்டும்.

• ஒன்றை மற்றொன்று மறுத்தோ புறக்கணித்தோ இயங்க முடியாது.

• மதம்மாறிப் போயுள்ள தமிழ் முசுலீம்கள் கூட, அறபு தமிழ் என்று ஒரு புதிய தமிழ்வகையையே தம் சமயம் காரணமாகத் திரித்து உருவக்கினும், தமிழ் என்பது அறபு இலாத தமிழ்தான்.

• அறபு மொழியைத் தமிழில் கலப்பதன் செயற்கைத் தன்மை அவர்களுக்கே நன்றாகப் புரிந்துள்ள காரணத்தால்தான் அந்த வேறுபட்ட தன்மையை அறபு என்ற சொல்லால் முன்னிருந்தியுள்ளனர்.
• அதுபோலத்தான் மற்ற கிறித்தவர்களும் இந்துக்களும் தாம்தாம் சார்ந்துள்ள மதத்தின் சமய மொழிக்கு ஏற்ப இணக்கம்பண்ணிக் கொண்டனர்.

• அந்த இணக்கம் என்பதற்கும் அப்பால்போய்; வந்த மொழியின்மீது பெருமதிப்பும் சொந்த மொழியின்மீது தாழ்வு மனப்பான்மையும் வைத்துக்கொண்டுள்ளனர்.

• தமிழோடு உயர்வோம், தமிழ் எங்கள் உயிர் என்று நினைப்பதற்கும், தமிழ் ஒரு தொடர்பியல் கருவி மட்டுமே என்று நினைப்பதற்குமான உள்ளுணர்வு ஒன்றல்ல.

• எல்லாம் இதன்பால் உள என்று தமிழ்மறைக்கு ஆன்றோர்கள் ஆற்றல் கூறியுள்ளதை எப்படி எந்த அலவுக்கு ஒருவரின் மனம் உணர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு அவருடைய மனத்தில் தமிழுணர்வும் தமிழர் என்னும் இனப் பெருமிதவுணர்வும் இருக்கும்.

• திருநெறிய தமிழ் என்று திருஞானசம்பந்தர் சொன்னதற்குப் பொருள் ‘தெவ நிலையை தரும் நெறியினையுடைய தமிழ்’ என்பது பொருள்.

• அந்தத் தமிழில் ஒன்றும் இல்லையா? அந்தச் சமற்கிருதத்தில் மட்டுமே தெய்வ நிலையைத் தரும் நெறி உள்ளதா?

• சமற்கிருதம் போய்விட்டால் பேரிழப்பு, தமிழ் போய்விட்டால் ஒன்றுமில்லை. யாருக்கும் ஓர் இழப்பும் இல்லைபோலும்!

• தமிழைத் தமிழாக இருக்கவிடக் கூடாது. அதில் தேவையில்லாத பிறமொழிச் சொற்களைச் சமயம், அறிவியல், தொழில்நுட்பம், … என்ற போர்வையில் எப்படியும் புகுத்தும் வெறியர்கள் செய்வதெல்லாம் சரி!

• தமிழில் இருக்கும் சொல்லையெல்லாம் [காண்க:- பூசை > பூஜை, காய்ச்சாயம் > காஷாயம், … எனத் திரித்த வடிவுகளையே மூலச்சொல் என்பதாக வலிப்பதும்; தமிழுக்குரிய இயர்சொற்கள் ஆகிய நீர், மீன், ஆணி, … போன்ற பல சொற்களைச் சமற்கிருதச் சொல் என்று வலிந்துரைப்பதும் என்ன வகையில் அறம்தரும் ஆக்கம் ஆகும்?]

• இப்படியாகத் தமிழ்ச்சொற்களைப் பிறமொழிக்குச் சொந்தம் ஆக்கி அழிவழக்கு பேசுவதெல்லாம் நேர்மைமிக்க அறிவுடைமையா?

• இதனைத் தடுத்துத் தற்காப்பு செய்துகொள்வது தனித்தமிழ் வெறியா?

• ஏன் இப்படி ஒரு தமிழ் அழிப்பு சேலையைச் செய்கிறார்கள்? என்று சிந்திக்கும் போது, தாய்க்குப் பிறந்த பிள்ளைக்கு மட்டுந்தான் வலிக்கிறது.

• இவர்கள் சொல்லுகிறபடிப் பார்த்தால், எல்லா வகையான கல்விக்கும் சமற்கிருதம் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க முடியும்.

• மற்ற தய்மொழிகளில் கல்வி என்ற பெயரில் ஒன்ரும் கற்பக்கப்பட மாட்டாது. தாய்மொழிக் கல்விக்கும் தேவை இருக்கமாட்டாது. எல்லாமே சமற்கிருதம் என்ற ஒரே மொழியில் இருக்கும் – எல்லோர்க்கும் எல்லா நிலையிலும் அது மட்டுமே போதும்.

• தேசிய மொழியாகவும் எல்லார்க்கும் பொதுவாகச் சமற்கிருதம் மட்டுமே போதுமானதாக இருக்கும். சிறார் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை அனைத்துநிலை கல்விக்கும் சமற்கிருதம் மட்டுமே இருந்து தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

@Katen on Instagram
This error message is only visible to WordPress admins

Error: No feed with the ID 1 found.

Please go to the Instagram Feed settings page to create a feed.