Press ESC to close

தமிழிறை வாழ்த்து


எடுப்பு

வாழ்த்துவமே! – இறைமை

தமிழ்செய்து வாழ்த்துவமே! – மலர்மிசையில்

– என்றும்

 

தொடுப்பு

அன்பியமே அதில் பிறங்கும் சிவமயமே!

அகரமுதல் மெய்கண்ட திருமந்திரமே!

எண்குணத் தறவாழி அந்தணமே! – எங்கள்

ஆதியமே! அருட்பெருஞ் சோதியமே!

– வாழ்த்துவமே!

 

முடிப்பு

ஐந்திணை முக்கழக மொழித்திறமே!

அறிதொறும் அறியாமை அகற்றும் அகம்புறமே!

ஐந்தியக்கும் ஆற்றல் பரம்பரமே – எதிலும்

அணுவுக் கணுவாகி ஆடும் ஆடலமே!

– வாழ்த்துவமே!

முடுகு

எழுத்தொடு சொல்பொருள் வேர்நெறி

முளைத்தெழும் முதல் மொழி வாழியவே!

அறம்பொருள் இன்பம் வீடெனத்

தமிழ்தரு நான்மறை வாழியவே!

குமரியிற் பிறந்து பரவிய

உலகப் பரம்பரை வாழியவே!

ஒருமை இறைநினை வுரிமையில்

முப்பொருள் உலகெலாம் வாழியவே!

 

இயற்கை வாழியவே – செந்

தண்மை வாழியவே

இறைமை வாழியவே – செந்

தமிழ்மை வாழியவே!

– வாழ்த்துவமே!

  • இர.திருச்செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

@Katen on Instagram
This error message is only visible to WordPress admins

Error: No feed with the ID 1 found.

Please go to the Instagram Feed settings page to create a feed.