
- சார்பினால் தோன்றாது;
- தான் அருவாய்
- எப்பொருட்கும்
- சார்பு என நின்று
- எஞ்ஞான்றும்
- இன்பம் ததைத்தரோ!
- வாய்மொழியான்
- மெய்யான்
- மனத்தான்
- அறிவிறந்த தூய்மையாம்
- மைதீர்
- சுடர்!
சார்பினால் தோன்றாது தான்அருவாய் எப்பொருட்கும்
சார்பெனநின்(று) எஞ்ஞான்றும் இன்பம் தகைத்தரோ
வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த
தூய்மையாம் மைதீர் சுடர்!
– தொல்காப்பியம்: நச்சினார்க்கினியர் உரையில் பொருளதிகாரப்
புறத்திணையியலில் பாடாண் திணையில் 27ஆம் நூற்பாவுக்கு
வரும் உரைமேற்கோள் செய்யுள்
இந்தப் பேரருட் பெருமொழியினை நந்தமிழ்ச் சமயத்தை முறைப்படி ஏற்றுக் கடைபிடிக்கத் தொடக்கமளிக்கப்படும் (எந்த அகவையினர்க்கும் சரி) திருத்தீட்கை வேளையில் செம்பொருள் நுகர்வாக ஆசான் ஓதுவிக்க பணிந்து ஓதிடும் மாணாக்கர்க்கு அகம் பதிக்கப்படுதல் வேண்டும்.
இந்தப் பெருமொழி மூலப் பெருந்தமிழ் மெய்நெறிக்கு நேரே உய்வித்தருளும் மெய்ப்பொருட் செந்தகைமை சான்றது. இதனை, தமிழர் தம் இறையியல் என்பதனை அறிவறியும் நட்டநடுவிடமாக உணர்ந்துகொள்ள வேண்டும். இதற்கு உட்பட்டதாகத்தான் அனைத்து மெய்யியல்களும் அமைந்திருத்தல் வேண்டும்.
இறைநிலை இலக்கணம் முற்றும் முழுதுமாக இதன்கண் அணுச்செறிவாக இயைந்து நிற்கின்றது. உயிர்நிலையும் – உயிர் தன் இருள்நிலை தீர்ந்து ஒளிநிலை பெற்று உய்தி பெறுவதற்கான நெறிமுறையும் ஒருங்கே இசைந்து ஒன்றில் இரண்டாய் மிளிர்கின்றது.
ஒலிநெறியில் உயிர்மெய்யாய்
மொழிநெறியால் ஆன்மத்துள்
ஒளிநெறியாய்ப் பிறங்கிநின்று
முட்டறுக்கும் அகத்தியமாய்
வெளிநெறியாய் மெய்யினுள்ளே
மெய்கண்டோர் மெய்ப்பொருளாய்
வழிவழியாய் வையகமேல்
வந்ததமிழ் வாழ்கவாழ்க!
– இர. திருச்செல்வம்

Leave a Reply